images என்னைப் பற்றி


பெற்றோரின் அரவணைப்பும் இறைவனின் கருனை இவற்றின் உருவம் நான்.

முயற்சி தேடல் வாய்ப்பு திறமை இவைகளின் தோழன் நான்.

நடிகர் திரு.சிம்புசார் இசையமைப்பாளர் திரு.யுவன்சங்கர்ராஜாசார்ரின் முலம் திரைத்துறையில் அறிமுகம் நான்.

கவிஞர் கருணாகரன் லட்சுமணன் திரைப்படபாடலாசிரியர்.

பிறந்தோம் என்றுஇருந்து விடாதே

சரித்திரம் நமது மறந்து விடாதே !

விடியும் பொழுதும்- நாவில்

புரளும் கவியும்

உலகை ஆளும் தமிழும்

இறைவன் கொடையே!

பாடல் மீதுள்ள ஆர்வம், கவிதை மீதுள்ள தேடல் இந்த இரண்டும் தான் என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்தது. என்னுடைய மானசீக குருநாதர் கண்ணதாசன் அவர்கள் மூலமாக எனக்குள்ளே ஒரு ஈர்ப்பு, அது என்னுடைய கவிதையின் பிறப்பிற்கு காரணமான ஊற்றாக அமைந்தது.

2005 ம் ஆண்டு நான் சினிமாக்குள் எனது முதல் தேடலை தொடங்கினேன். முதல் தேடலில் யுவன்சங்கர்ராஜாசார் , சிம்புசார் இவர்களுக்கு பாட்டு எழுத வேண்டும் என்று ஒரு குறிக்கோள் நிர்ணயித்தேன் .

யுவன்சங்கர்ராஜாசார் 7G ரெயின்போ காலனி போன்ற படங்களில் தனி ட்ரெண்டில் வித்தியாசமாக இசையமைத்து கொண்டிருந்தார்.

இன்னொருபுறம் சிம்புசார், தொட்டி ஜெயா மற்றும் மன்மதன் படத்தில் தனி ட்ரெண்டில் வித்தியாசமாக நடித்து கொண்டிருந்தார். இந்த இரண்டு பேரும் அந்த காம்பினேஷன் தாண்டிவரும் போது வேறு மாதிரியான இடத்தின் அடையாளமாய் இருந்தது.

அப்பொழுது நான் முடிவு செய்தேன். இவர்களுக்கு முதல் பாடல் எழுத நாம் எப்படியாவது அறிமுகமாக வேண்டும், அப்பொழுது தேடும் போது யுவன்சார் மூலமாக சிம்புசார் அறிமுகம் கிடைத்தது. அப்படி எழுதப்பட்டது தான் முதல் படமான வல்லவன் அதில் ஒரு காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும், காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும் என்ற பாடல்.

என்னுடைய அடுத்த தேடல் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய முத்திரை பதிக்க முக்கிய காரணமாக இருந்தது, நடிகர் கார்த்திசார், இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்சார்,இயக்குனர் சுராஜ்சார் இவர்கள் மூன்று பேரும் என்னை ஓப்பனிங் பாடலாசிரியராக மாற்றினார்கள்.

அதாவது ஹீரோவின் அறிமுக பாடல், வி ஆர் பேட் பேட் பாய்ஸ், இது தான் நான் எழுதிய பாடல், நல்ல வெற்றி பாடலாக அமைந்தது அதிக முறை டிவியில் ஒளிபரப்பானது, படம் வருவதற்கு முன்னர் முதல் முதலாக எல்லா சேனலிலும் வந்த அதிகமான பாடல், அதை தொடர்ந்து தகராறு, மதில் மேல் பூனை, அதை தொடர்ந்து அர்ஜுன்சார் நடித்த வல்லக்கோட்டை போன்ற பல படங்களில் பாடல் எழுதினேன்.

சென்னை - 28 பார்ட் - 2 ஒப்பனிங் சாங் தி பாய்ஸ் ஆர் பேக் வரோம்ன்னு சொல்லு தள்ளி நில்லு, ஒரு மிகப்பெரிய இடைவெளி வல்லவனுக்கும் இந்த பாட்டுக்கும், மிகப்பெரிய இடைவெளி ஆனா நடுவில் சில தவறவிட்ட வாய்ப்பு பல இருக்கு, இப்பொழுது திரைக்கு வந்த சக்க போடு போடு ராஜா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் , பேரன்பு ராம்சார் படம், என்னுடைய Favorite டைரக்டர், போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளேன்.

இப்பொழுது வசந்தபாலன்சார் படத்தில் எழுதியது, த்ரிஷா மேடத்தின் கர்ஜனை படத்தில் எழுதியுள்ளேன், அதற்கு முன் நாயகி படத்தில் எல்லா பாடல்களும் எழுதியுள்ளேன், இப்படித்தான் என்னுடைய பாடல்கள் பிறந்தது இந்த வழி தடத்தில் எனது பயணம் பயணிக்கிறது.

நன்றி!