Our Lyrics

Vallvan

காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும் -காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும் - பகலெல்லாம் ஆட்டம்போடும் இரவெல்லாம் ஒரு துளி மயக்கம் கனவெல்லாம் உன்னை தேடும்- உயிரெல்லாம் இரு விழி கலக்கும் காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும் காதல் இல்லாத ஜீவன் எங்குஇருக்கும் பள்ளிக்கூடம் போனாலும் பாடம் - நான் படிக்கலயே பட்டாம்பூச்சி ஆனாலும் இன்னோம் நான் பறக்கலயே - பகலெல்லாம் ஆட்டம்போடும் இரவெல்லாம் ஒரு துளி மயக்கம் கனவெல்லாம் உன்னை தேடும்- உயிரெல்லாம் இரு விழி கலக்கும் காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும் - காதல் இல்லாத ஜீவன் எங்குஇருக்கும்

Alexpandian

எல்லோருக்கும் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம் என்ன பார்க்க வந்த எல்லோருக்கும் டப்புள் வணக்கம் வணக்கம்.. ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும் பட்டி மன்றம் நடக்கும் என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும் அடி கிடைக்கும், கிடைக்கும்... மச்சி தல இந்தா மாலை உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா Am a Bad Bad Bad Bad Boy... am a Bad boy, am a Bad boy ஏ வருஷத்துல பாதி நாளு நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு பாரு பாரு பாரு கேட்டுப்பாரு ஏ நல்லவனா? கிடையாது படிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது காது காது காது புடிக்காது கேடி, ரவுடி, மொல்லமாரி அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என் தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா (Am a Bad) ஜில்லுனு தான் வாருவானே ஜாங்கிரி போல சிரிப்பானே ஜீ பூம் பா செய்வானே Bad Boy, Bad Boy மெக்னட் கண்ணால சொக்லெட்டு கன்னத்தால மயக்கிபுட்டு போரானே Bad Boy, Bad Boy ஹே யே குரு தான் நம்பியாரு என்னையும் வில்லனா மாத்திடாரு டாரு டாரு டாரு மாத்திடாரு ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு இப்ப full-u life ஜில்லு ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா மச்சி மாசி மாத்தி யோசி அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா (Am a Bad)

Basker oru rascal

நான் நல்லவனானு தெரியாது] கேட்டவனானு தெரியாது குட் பாயானே தெரியாது பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு இம்மாம் பெரிய ஆளு நெஞ்சில் பாசம் போடுதே டீலு என்ன மாறி டீலீங் ஐயோ ஏதோ ஏதோ பீலிங் பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு ஐயோ இது ஒரு மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ மாறி பீலிங் கலங்காதேடா கலங்காதேடா இது ஒரு இது ஒரு டைப் பீலிங் பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு அட ரெண்டும் ரெண்டும் நாலாகிடும் வாழ்க்க குல்பியா கூழாகிடும் கத்தியும் அருவாவும்தான் போயிடும் புதுசா லைப்'உ டர்ன் ஆகிடும் மனசே ஏங்கிடுச்சு ரசிக்க தோனிடுச்சு வேணாம் பாஸ்சு…… வேணாம் பாஸ்சு ஆயிடுவான் போல பாதி லூசு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு வெட்கத்த விட்டு பேச தோணும் ஏதோ ஒன்னுல நின்நெ நானும் ரைட்'ஆ ராங்'ஆ ரெண்டு குணம் ரெண்டும் கெட்ட மிரண்டான் நானும் மீண்டும் ரி-என்ட்ரிஆ அதுக்கு பீல் பன்றியா வேணாம் பாஸ்சு…… வேணாம் பாஸ்சு வாழ்க்க எப்போதும் நம்ம டேஸ்டு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு ஐயோ இது ஒரு மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ மாறி பீலிங் கலங்காதேடா கலங்காதேடா இது ஒரு இது ஒரு டைப் பீலிங் பாஸ்கர் ஒரு ராசுக்கோலு பாஸ்கர் ஒரு ராசுக்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு

Nayagi

ஹே யோ கேர்ள் கம் ஆன் ரூல் தி வேர்ல்ட் புட் யுவர் பாவ்ஸ் அப் அண்ட் ரோர் ஷோ தேம் யுவர் பவர் ப ப பவர் கேர்ள் பவர் இரவு பொழுதிலே இடி விழுந்தால் மனசு பதறுமே ஐயோ பயம் காட்டு வழியிலே மிட்டு நைட்ல பஞ்சர் ஆனா டென்ஷன் பயம் சரக்கு அடிச்சிட்டு பாஸ்ஏ திட்டிட்டா காலையில் ஆபீஸ் பயம் எக்ஸ்கேர்ள் பிரண்டுடன் மனைவியிடம் சிக்கினா கடவுளே இப்போ பயம் ஏய் கையிலதான் அரிப்பெடுத்து சுருட்டி போட்டாலே பிரண்டு ஜம்ப் போன பயம் (பயம் பயம்) எக்ஸாம் ஹால் உள்ள போயி பாக்கெட்ல கை வெச்சி ஹால் டிக்கெட் மிஸ்ஸாய் போன (பயம் பயம்) பூனை குறுக்கே வாக்கிங் வந்த பயம் சுவத்து மேல பல்லி கண்டா பயம் சிறுவனுக்கு பூச்சாண்டின்னா பயம் அட பிராந்தைப்பூச்சி சத்தம் கேட்டா பயம் சிலருக்குத்தான் வாழ்க்கை பெரும் பயம் எல்லோர்க்கும் மரணம் தொடும் பயம் மணமுடிஞ்ச பின்னாலே புது வீடு அனுப்பயில ஒரு மூளை எதோ பயம் தண்ணி பார்த்த சிலருக்குத்தான் பயம் நிழல் கண்டாலே பலருக்கும் பயம் பேயுக்கு தான் கடவுள் மேல பயம் இங்க மனுஷனுக்கு மனுஷன் மேல பயம் கெட்ட கனவு ஒரு விதமா பயம் பொய்யுக்குதான் உண்மை முகம் பயம் அறுவடை நேரத்துல கருமேகம் திரண்டலே விவசாயி வாழ்வே பயம்

Peranbu

பல்லவி


செத்து போச்சு மனசு

செவிடாச்சு பூமி

குருடாச்சு சாமி

யாரை நானும் கேட்பன்

இந்த பூமி பந்துல...

என்னவிட்டுப் போன

நீயும் எங்க தெரியல

செத்து போச்சு மனசு

இருள் இங்கு ஆச்சு

நிலவு எங்கு போச்சு

என்னவிட்டுப் போன

அட விதியே சொல்லிடு

மரமான செடிய

தோளில் எப்படி சுமப்பது?

செத்துப் போச்சு மனசு...

செத்துப் போச்சு மனசு...

அட நின்னு உறங்கக் கூடத்தான்

இந்த மண்ணில் இடமில்லை

மரக்கிளையில் தங்கப்போனாலும்

அட பறவையும் அங்க விடவில்லை

செத்து போச்சு மனசு...


சரணம் 1


காக்கா குஞ்ச போல நானும்

கரையாத காலம் இல்ல

மரத்துக்கு கீழ நிக்கும் நீயும்

நிமிந்துகூட பாக்கவில்ல


முடியாது என்றான போதும்

நான் முயற்சித்து தோற்கிறேன்

விடியாது என்றான போதும்

நான் கிழக்கையே பார்க்கிறேன்


இயற்கையின் தீர்ப்பில் நானே

குற்றவாளியா?

அதை திருத்தி எழுதத் தானே

யாருமில்லையா?


செத்து போச்சு மனசு...


சரணம் 2


என்னப்போல ஜீவன் எல்லாம்

ஒதுங்கிக் கொள்ள இடமும் இல்ல

உன்னவிட வாழ்க்கையில்

எனக்குன்னு யாருமில்ல


என் மீதினில் மோதும் காத்து

அது பாவத்தின் ஈரமே

உன் மீதினில் சாயும் போது

என் சாபங்கள் தீருமே


குடைகளை கண்டு மழையும்

வானில் நிற்காதே

தடைகளை கண்டு வாழ்க்கை

பாதியில் முடியாதே


மெல்லத் துடிக்கும் மனசு...

Serndhu polama

என்னாச்சு எனக்கு உன்னோட என் கோபம் கலஞ்சி போச்சி உன்மேலாட பிஞ்சி நெஞ்சு விதைச்ச காதல் மீண்டும் பூ பூக்குதே வஞ்சி உன்ன நெனச்சி - தீயில் எரியும் பஞ்சானதே மனம் ததும்புதே - சினேகிதா சினேகிதா என்னாச்சு எனக்கு உன்னோட - என் என் கோபம் கலஞ்சி போச்சி உன்மேலாட உன் அருகே இருந்தும் தவித்தேன் - என் மனதில படர்ந்தாய் உயிரே என் நிழலோடு நீ நின்றாகி - என் தவிப்பை நீ ரசிக்கிறாய் விழி வழியில் வடிகிறதே - காதல் மழையே எங்கு உன்னைவந்து சேர்வதற்கு சினேகிதா சினேகிதா உள் மனதில் என்னிலேர் ஆசை - உன் இடத்தில மௌனமே பாஷை பகல் நீயாக கனல் நானாக - என்னில் உறவாட அழைக்கிறேன். முதல் கனவே உன் உரையே எழுதி விடு அன்பே - எனக்குள்ளே உன்கவிதை சினேகிதா சினேகிதா என்னாச்சு எனக்கு உன்னோட என் கோபம் கலஞ்சி போச்சி உன்மேலாட பிஞ்சி நெஞ்சு விதைச்ச காதல் மீண்டும் பூ பூக்குதே வஞ்சி உன்ன நெனச்சி - தீயில் எரியும் பஞ்சானதே மனம் ததும்புதே - சினேகிதா

Sakka podu podu raja

சிறு சிறு சிறு பொழுதில் துரு துருவென நுழைந்து ஏண்டி என்னை கொன்றாய். குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய். அன்பே விழியே மூடி ரசிக்கிறேன் நீ தினமும் தோன்றவா. அதை ஆயுள் ரேகை ஆக்கியே என் உயிரில் சுமக்கவா. இதுதானா இதழ் தேனா அதை பருக பிறந்தேனா பருகவா. இது நீயா அது நானா ரெண்டும் சேர கலப்போமா மயங்கினேன். சிறு சிறு சிறு பொழுதில் துரு துருவென நுழைந்து ஏண்டி என்னை கொன்றாய். குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய். காதல் பேசி காதல் பேசி காதல் செய்கிறேன். நான் நான் என நான் நினைத்திட ஒரு வாய்ப்பு கேட்கிறேன். பொன்மாலை விடியும் பொழுதில் உன்னோடு நானும் அருகில் உன்னை கேட்குது என் இதயம். என் இதயம் உன் மனம் அறியும் திரித்தாலும் திரியாத காதல் இது. நம் காதலும் ஊருக்குள்ள சொல்லிட தேவை இல்ல. சிறு சிறு சிறு பொழுதில் துரு துருவென நுழைந்து ஏண்டி என்னை கொன்றாய். குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய். அன்பே விழியே மூடி ரசிக்கிறேன் நீ தினமும் தோன்றவா. அதை ஆயுள் ரேகை ஆக்கியே என் உயிரில் சுமக்கவா. இதுதானா இதழ் தேனா அதை பருக பிறந்தேனா பருகவா. இது நீயா அது நானா ரெண்டும் சேர கலப்போமா மயங்கினேன். சிறு சிறு சிறு பொழுதில் துரு துருவென நுழைந்து ஏண்டி என்னை கொன்றாய். குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய்.

Thagararu

இடி முழக்கம் விதி துரத்தும் - வழி கிடப்ப அனல் கொதிக்க கொதிக்க விடை கிடைக்க படை கிளம்பு -உன் ஞாபகம் உன் ஞாபகம் இடி முழக்கம் விதி துரத்தும் - வழி கிடப்ப அனல் கொதிக்க என்ன சொல்லுதே நண்பா நண்பா எட்டு திசைகள் அலறி அடங்க நெஞ்சில அக்னி குழம்பு கொதிக்க கண்ணில் அவன் முகம் நின்று பதைக்க ஜகமே எரியட்டும் - விதையை தேடி அலைந்திடும் நேரம் பகையை கண்டு முடிந்திடும் காலம் நண்பன் நினைவில் விழியின் ஈரம் நண்பா நண்பா - ஜகமே ஜகமே ஜகமே ஜகமே ஜகமே .............. பச்சை ரத்தம் குரோதம் தீர்க்க நித்தம் நித்தம் வழியில் தவிக்க உள்மனம் புயலென மண்ணை கடக்க வேட்டை துவங்கட்டும் - பிஞ்சு வயதில் கொண்ட நட்பு - சூழ்ச்சி வலையில் கொன்றது தப்பு - இன்றுடன் முடியும் அவனின் பிறப்பு உளியே அதிரட்டும் நண்பா நண்பா நண்பா ............. சதியின் வலையில் விதியின் நாட்டம் நண்பனின் உயிர் விளையாடியதே குள்ளநரிக்கும் வேங்கையை சாய்த்து மகிழ்ச்சியில் புலி பதுங்கியதே ரத்தத்தில் நடக்கும் இது ருத்ரத்தின் யாகம் யுத்தத்தின் முடிவு இது நெருங்கியதே அமைதி கொள்ளாமல் மனம் ரௌத்திம் பழகட்டும் - கடலில் குளித்தாலும் மனம் தீயாய் எரிகிறதே எட்டு திசைகள அலறி அடங்க நெஞ்சில அக்னி குழம்பு கொதிக்க கண்ணில் அவன் முகம் நின்று பதைக்க ஜகமே எரியட்டும் - விதையை தேடி அலைந்திடும் நேரம் பகையை கண்டு முடிந்திடும் காலம் நண்பன் நினைவில் விழியின் ஈரம் நண்பா நண்பா ............. மனதில் கொதிக்கும் அனலின் வெப்பம் உலகை தீக்கறை ஆக்கிடுமே - குருதி சிந்திய செம்மண் பூமி இன்னொரு குருடசித்தம் ஆயிடுமே - உயிர்களில் ஆடிடும் இது சதுரங்க ஆட்டம் - மோதி பார்த்திடலாம் இது வேங்கைகள் கூட்டம் எட்டு திசைகள அலறி அடங்க நெஞ்சில அக்னி குழம்பு கொதிக்க கண்ணில் அவன் முகம் நின்று பதைக்க ஜகமே எரியட்டும் - விதையை தேடி அலைந்திடும் நேரம்